ETV Bharat / state

கன்னியாகுமரியில் தொடர் மழை - 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு - Western Ghats

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatகன்னியாகுமரியில் பெய்த கனமழையால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

author img

By

Published : Aug 3, 2022, 11:36 AM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தததை தொடர்ந்து மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 1) மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை, தச்சமலை ,குற்றியாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கனமழையால் மலையோர பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இதேபோல் மோதிரமலையில் இருந்து குற்றியார் செல்லும் தரைமட்ட பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் தங்களின் வாகனத்தை மறுகரைக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளனர்.

கனமழையால் கோதையாறு வன பகுதிக்குள் அமைந்துள்ள மோதிரமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாரிலிருந்து இரட்டை அருவிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலமும் சேதமடைந்தது. முக்கிய அனைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செருப்பாலூர் நீர் வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீர்வரத்து 1,45,000 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.