தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி தஞ்சாவூரில் பேராவூரணி தொகுதியைத் தவிர்த்து 13 ஒன்றியக் குழுத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 12 ஒன்றியங்களையும், அதிமுக ஒரு ஒன்றியத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஒன்றியக் குழுத் தலைவர்களாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1.தஞ்சாவூர் ஒன்றியம் - வைஜெயந்தி மாலா (திமுக)
2.ஒரத்தநாடு ஒன்றியம் - பார்வதி குலுக்கல் முறையில் வெற்றி (திமுக)
3.அம்மாபேட்டை ஒன்றியம் - கலைச் செல்வன் ( திமுக )
4.பட்டுக்கோட்டை ஒன்றியம் - பழனிவேல் (திமுக)
5.மதுக்கூர் ஒன்றியம்- அமுதா போட்டியின்றி தேர்வு (அதிமுக)
6.திருவோணம் ஒன்றியம் - செல்லம் (திமுக)
7.சேதுபாவசத்திரம் ஒன்றியம் - முத்துமாணிக்கம் (திமுக)
8.பூதலூர் ஒன்றியம் - அரங்கநாதன் (திமுக)
9.திருவையாறு ஒன்றியம் - அரசபாகரன் (திமுக)
10.பாபநாசம் ஒன்றியம் - சுமதி (திமுக)
11.கும்பகோணம் ஒன்றியம் - காயத்ரி (திமுக)
12.திருவிடைமருதூர் ஒன்றியம் - சுபா (திமுக)
13.திருப்பனந்தாள் ஒன்றியம் - தேவி ரவிசந்திரன் (திமுக)
இதையும் படியுங்க: காதலர்களினால் கோயிலில் ஏற்படும் கலங்கம் - பொதுமக்கள் கோரிக்கை!