கன்னியாகுமரி தொகுதிக்குள்பட்ட கரும்பாடூர் பகுதியில் சாலை பணிகள் சீரமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவரது தொகுதிக்குள்பட்ட கரும்பாட்டூர் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் மனு ஒன்றை அதிகாரிகளிடம் அளித்தார். இதனை பரிசீலித்த அதிகாரிகள் நாளை (இன்று) காலை முதல் சாலை பணிகள் தொடங்கும் என்று உத்தரவாதம் அளித்த பின்னர் அவர் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க: ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு விசிக போராட்டம்