கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து திமுக சார்பில் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.
மேடையில் பேசிய அவர், தான் கவுன்சிலராக இருக்கும் நான்காவது வார்டில், கிராம சபைக் கூட்டத்திற்காக நடப்பட்ட கட்சிக் கொடிகளுக்கு இடையே பாஜகவினரும் தங்கள் கொடிகளை கட்டியதாகவும், அதனை இரவோடு இரவாக கழகத் தோழர்கள் அகற்றியதாகவும் கூறினார்.
தான் கவுன்சிலராகவும், மேயராகவும், மாவட்ட செயலாளராகவும் இருக்கும் இடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பாஜக கொடி அல்ல; எதையாவது நீட்டினால் கழுத்தை அறுத்துவிடுவது போல் சைகை காட்டினர்.மேலும் அதற்கு எத்தனை வழக்கு வந்தாலும் சமாளிக்கத் தயார் எனக் கூறினார்.
மேயர் மகேஷின் செயலைக் கண்டித்து அன்றிரவே கோட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் புகார் மனு வழங்கினர்.
இதையும் படிங்க: ரெட் ஜெயன்ட் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - கே.பாக்யராஜ்