கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘அனைத்து தரப்பினரையும் போராட்டத்திற்கு தூண்டிவிட்டு குளிர் காய்வது திமுகவின் வழக்கம். அதேபோல் தற்போது அரசு மருத்துவர்களை தூண்டிவிட்டுள்ளது. தெய்வத்திற்கு நிகரான மருத்துவர்கள் தங்கள் குறைகளை பேசி தான் தீர்க்க வேண்டும். இதற்கு அரசு தயங்காமல் முன்வரவேண்டும்’ என்று கூறினார்.
ட்விட்டரில் பாஜகவை குறை கூறும் பிரியங்கா காந்திக்கு, ‘பட்டேல் குறித்த வரலாறு தெரியாது. காங்கிரஸை கலைக்குமாறு கூறிய காந்தியின் பேச்சை கேட்காத அக்கட்சியின் தலைவர்கள் தற்போது காந்தியின் கொள்கைக்கு முரணாக செயல்படுகின்றனர். மேலும் காந்தி பற்றி பேச காங்கிரசாருக்கு அருகதையில்லை’ என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலை இப்படி கொண்டாடுங்க...! - ஆளும்கட்சிக்கு பொன்னாரின் பொறி பறக்கும் அறிவுரை!