நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் வடசேரி வஞ்சி ஆதித்தன் தெரு, பரதர் தெரு, நெசவாளர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அனைத்து இடங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி அமைந்ததும் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனுடன் நகர செயலாளர் மகேஷ்,கூட்டணி கட்சியினர் பலரும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: பள்ளப்பட்டி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆதரவாகக் களமிறங்கிய அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!