கன்னியாகுமரி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவர், பிற்பகல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் அதிமுக ஆகிய கட்சிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாலும், இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்" என்றார்.