கன்னியாகுமரி மாவட்ட கிளப் அணிகள் சார்பில் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டிலும் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் அருகே கோணம் என்ற பகுதியில் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் கேரளாவிலிருந்தும் 20 அணிகள் கலந்துகொண்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்றில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணியும் குமரி மாவட்ட இனையம் புத்தன்துறை அணியும் மோதிக்கொண்டன.
இதில் மூன்று கோல் வித்தியாசத்தில் குமரி மாவட்ட இனையம் புத்தன்துறை அணி முதல் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது. மேலும் வெற்றிபெற்ற அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை பார்வையாளர்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.