ETV Bharat / state

குமரியில் கொடிநாள் நிதி வசூல் தொடக்கம் - Flag day fund collection start in Kanyakumari

கன்னியாகுமரி: முப்படைவீரர் கொடிநாளான இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உண்டியல் வசூலைத் தொடங்கிவைத்தார்.

குமரியில் கொடிநாள் நிதி வசூல் தொடக்கம்
குமரியில் கொடிநாள் நிதி வசூல் தொடக்கம்
author img

By

Published : Dec 7, 2020, 1:34 PM IST

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முப்படைவீரர்களின் கொடிநாள் நிதி வசூலை இன்று தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், "நாடு முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி முப்படை வீரர்களின் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்நாளில் அரசு, முன்னாள் படைவீரர்களுக்கு, அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டிவருகிறது. கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பத்திற்காகவும், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படை வீரர்களின் நல திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதி உதவியை அதிகப்படியாக வாரி வழங்க வேண்டும்.

அதேபோல் குமரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் கொடிநாள் வசூலாக 71 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் அரசால் நிர்ணயம்செய்யப்பட்டு 63 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வசூல்செய்யப்பட்டு அரசுக்குச் செலுத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.