கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேவுள்ள இரவிபுதூர் விவசாய கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராக அதிமுக பிரமுகர் பிரைன்ட் லூயிஸ் என்பவர் இருந்துவந்தார்.
இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது பொறுப்புத் தலைவராகத் துணைத் தலைவர் ராபர்ட் கிளைவ் செயல்பட்டுவருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கம் மூலம் விவசாய கடன் வழங்கவில்லை.
விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவுத் துறை அலுவலரைக் கண்டித்து நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் திருவட்டார் ஒன்றியத் துணைச் செயலாளர் கலைகிரி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.