ETV Bharat / state

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை! - government employees

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை
author img

By

Published : Jul 16, 2022, 11:02 PM IST

கன்னியாகுமரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க சி.ஐ.டி.யு. பிரிவு கன்னியாகுமரி மாவட்ட ஐந்தாவது மாநாடு நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திருமதி டெய்சி, உட்பட பல முக்கிய மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் அங்கன்வாடி ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக ஆக்க வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் 25ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன எனவும்; அதை அரசு நிரப்பாததால் பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்;

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி உதவியாளர்களுக்கு கிராஜுவெட்டி 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் இறந்தால் பெண் வாரிசுக்கு மட்டும் வேலை; அது ஆண் வாரிசாக இருந்தால் வேலை வழங்கப்படாது என்ற விதியை மாற்றி அனைத்துத்துறைகளிலும் உள்ளது போல ஆண், பெண் என வேறுபாடு பாராமல் வாரிசு வேலை வழங்க வேண்டும்;

சத்துணவு மையங்களுக்கு குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்பு, இணை உணவு மற்றும் முட்டைகள் அரசிடமிருந்து முறையாக கிடைப்பதில்லை என்றும்; இந்தியாவில் அங்கன்வாடி மையங்களை தனியார் மயம் ஆக்கக்கூடாது என ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவில் 6 மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது; தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் 54 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இந்நிலையில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதால் அரசு உடனே காலிப் பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.