ETV Bharat / state

தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் என்ன? - kanyakumari district latest news

கரோனா பெருந்தொற்றால் தொழில் வளர்ச்சி இல்லாததால் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

what is  reason decreased students enrollment in technical education
தொழில்நுட்பக் கல்லூரிகளில் குறைந்துள்ள மாணவர் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் என்ன?
author img

By

Published : Dec 13, 2020, 8:14 PM IST

கன்னியாகுமரி: கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த கல்வி ஆண்டில் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாலிடெக்னிக், பொறியியல், ஐடிஐ உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் இந்தாண்டு பெரும்பாலான இடங்கள் காலியாகவுள்ளன. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது.

இது தொடர்பாக, விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார் பேசியபோது, "10 ஆண்டுகளாக இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளை விட இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப படிப்பை பொருத்தளவில் கடந்தாண்டுகளில் இயந்திரவியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

தொழில்நுட்பக் கல்லூரிகளில் குறைந்துள்ள மாணவர் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் என்ன?

இந்தாண்டு இயந்திரவியல் படிப்பில் போதுமான மாணவர்கள் சேரவில்லை. பதிலாக, இசிஇ படிப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தொழில்நுடப் படிப்புகளை பொறுத்த அளவில் அனைத்துப் படிப்பிற்கும் வேலை வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இது தொடர்பாக மாணவர்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தவரை முதலாம் ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 21 முதல் நடைபெற்றுவருகிறது. தற்சமயம், செயல்முறை வகுப்புகள் நடத்துவதில் சிரமம் இருந்துவருகிறது" என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் பேராசிரியை சிபிலா ராஜன், கரோனா காலகட்டத்தில் பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. கரோனா காலத்தில் நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை. இதனால், தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, தொழில்நுட்பப் படிப்புகள் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனால், பெரும்பாலான மாணவர்கள் தொழில்நுட்ப படிப்பை தவிர்த்து வேறு படிப்புகளில் கவனம் செலுத்திவருகின்றனர். இது தொடர்பாக, மாணவர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கடந்தாண்டுகளை விட இந்த ஆண்டு தொழில் நுட்பப் படிப்புகளில் 20 விழுக்காடு மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பினாலும், பல தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாகவே உள்ளன.

எனவே, அரசு நடவடிக்கை எடுத்து மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் சேர்க்கை 31 வரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.