நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி குழுவினர் 12 பேர் நேற்று திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு டாடா சுமோ காரில் நாகர்கோவில் நேக்கிச் சென்றுக்கொண்டிருந்தனர். கார் வெள்ளமடம் அருகே சென்ற போது நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது மோதியது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த 8 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில், மூன்று பேர் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் காண விரைந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய காரில் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியை சேர்ந்த மூவர் பயணம் செய்துள்ளனர்.