ETV Bharat / state

கோட்டார் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

author img

By

Published : Nov 8, 2019, 11:10 PM IST

நாகர்கோவில்: கோட்டார் காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Criminal Investigation Department at the Kottar Inspector's home in Nagercoil, நாகர்கோவிலில் கோட்டார் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் அன்பு பிரகாஷ். இவர் குமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஆய்வாளராகப் பணியாற்றி உள்ளார். இவர் மீது கடந்த வருடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், குமரி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேக்கால் புதூரில் ஆய்வாளர் அன்பு பிரகாஷின் வீட்டிற்கு இன்று மீண்டும் சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். இது குறித்து குமரி லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் கூறும்போது, 'ஏற்கனவே ஆய்வாளர் அன்பு பிரகாஷ் மீதுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஆவணங்கள், உடமைகள் தொடர்பாக அவர் வீட்டில் மீண்டும் சோதனை மேற்கொண்டோம். ஆனால் பணமோ, ஆவணங்களோ எதுவும் சிக்கவில்லை' என்றார்.

Intro:வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகாரில் கோட்டாறு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.Body:tn_knk_02_police_vijilens_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகாரில் கோட்டாறு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
 
நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பு பிரகாஷ். இவர் குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் மீது கடந்த வருடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது சொத்த ஆவணங்கள், நகைகள் போன்றவை சோதனை செய்யப்பட்டிருந்தன.
 
இந்நிலையில் நேற்று நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேக்கால் புதூரில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷின் வீட்டிற்கு சென்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து குமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் கூறுகையில்; ஏற்கனவே இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மீதுள்ள வருமானத்திற்கு அதிகமான சேர்த்த வழக்கில், ஆவணங்கள், மற்றும் உடமைகள் தொடர்பாக அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினோம். ஆனால் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்றார்.
 Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.