ETV Bharat / state

திமுக சார்பில் தங்க கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி - திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக தலைவர் தங்க கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

cricket
cricket
author img

By

Published : Mar 15, 2020, 10:14 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் தழுவிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக தலைவர் தங்க கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் தலைமையில் நடந்த போட்டியை மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அறுபது அணிகள் கலந்து கொண்டன.

போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைபோல் பரவும் கரோனா வைரஸ் - ஆர்.பி. உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.