ETV Bharat / state

நாகர்கோவில் காசி வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி! - பெண்கள் மீதான பாலியல் சீண்டல் வழக்கு

நாகர்கோவில் காசி மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களிடம் ஆபாசமாக சீண்டல் செய்த வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

காசி வழக்கு மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல்

author img

By

Published : Jan 12, 2021, 6:29 AM IST

Updated : Jan 12, 2021, 7:12 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்புகொண்டு, காதலிப்பதுபோல் நடித்து அவர்களோடு தனியறையில் இருந்ததை வீடியோக்களாக எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்கள் எழுந்தன.

அந்த புகார்களைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசி மீது கந்துவட்டி தொடர்பாக இளைஞர் ஒருவர் அளித்தப் புகார், காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்தப் புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காசி வழக்கு தற்போது சிபிசிஐடி காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கந்துவட்டி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பொங்கல் விடுமுறை முடிந்ததும் இந்த மூன்று வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளன என சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் மற்றும் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஜன.11) இரவு நாகர்கோவில் ஜெ எம் நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடியினர் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததும் மேலும் 3 வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையை காசி மீது தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: மூன்று நாள் விசாரணைக்கு பிறகு இடைத்தரகர் ரசீத் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்!

Last Updated : Jan 12, 2021, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.