கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கீழ்பால்கிணற்றான்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர், நீதிபதி அலுவலகத்தின் ஊழியராக இருந்தார். நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வனத்துறை சிறப்பு நீதிமன்ற அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் செல்வராஜ் பணிக்கு திரும்பினார்.
இந்நிலையில், அலுவலக அறை திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செல்வராஜ் இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டாறு எஸ்.ஐ சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர், செல்வராஜ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். செல்வராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலக அறைக்குள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊத்தங்கரை பகுதிகளில் ஒரு வாரமாக தொடரும் சிறுவர்களின் மரணம்; பீதியில் மக்கள்!