கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த காவலர், குளச்சல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிகிறார். நாளை (ஏப். 2) குமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பிற்கு மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களிலிருந்து காவலர்கள் செல்கின்றனர். பாதுகாப்பிற்கு செல்லும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தலைமை காவலருக்கு கரோனா தொற்று
இந்நிலையில், நேற்று (மார்ச் 31) குளச்சல் காவல் துறை தலைமை காவலர், குளச்சலில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார்.
அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா!'