ETV Bharat / state

கரோனா பரிசோதனை பிரிவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை பிரிவில் பணியாற்றி வந்த செவிலியர்கள், லேப் டெக்னிஷியன்களை பணிக்கு வர வேண்டாம் எனக்கூறியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கரோனா பரிசோதனை பிரிவு ஊழியர்கள்
கரோனா பரிசோதனை பிரிவு ஊழியர்கள்
author img

By

Published : Jun 1, 2021, 7:40 PM IST

கன்னியாகுமரி: கரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த 25 பணியாளார்களை பணிக்கு வரவேண்டாம் எனக் கூறியதை எதிர்த்து, அந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றின் முதல் அலை முதல், நடபாண்டு வரை குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி மையத்திலும் சளி மாதிரிகள் எடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தபட்டோம்.

இதற்காக இரவு பகல் என்று பாரமால் குடும்பங்களையும் மறந்து பணியாற்றி வந்தோம். ஏற்கனவே மருத்துவ சேவைகளில் மருத்துவர்கள், செவலியர்கள் தட்டுபாடு காரணமாக மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்தது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் புதிய பணியாளர்கள் வந்ததால் நேற்று வரை கரோனா நோயாளிகளின் பரிசோதனை பிரிவுகளில் பணிபுரிந்து வந்த 25க்கும் மேற்பட்ட செவலியர்கள், லேப் டெச்னிசியகளை பணிக்கு வரவேண்டாம் என கூறிவிட்டனர்.

கரோனா காலத்தில் உயிரையும் பணயம் வைத்து சளி மாதிரிகள் எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: தற்காலிக மருத்துவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.