கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைசியாக கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் 18 நாள்களாக யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. இதனால், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த குமரி மாவட்டம் மஞ்சள் மண்டலமாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து குமரி மாவட்டத்திற்கு நேற்று வரை 900 பேர் வந்துள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 500 பேருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து நடந்த பரிசோதனையின்போது வெளியூர்களிலிருந்து வந்த ஆறு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் இவர்கள் சொந்த ஊரான, தளவாய்புரம், சாந்தோம் நகர், தென்தாமரைகுளம், கல்லுக்கூட்டம் ஆகிய நான்கு இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் எட்டாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனாவிற்கு மருந்தாக கங்கை நீர் தீர்வாகுமா - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்வது என்ன?