கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களால் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பத்துகாணி அருகே கோவில்விளையைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பெண் ஊழியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பெண் ஊழியர் மூலம் மேலும் இருவருக்கு கரோனா பரவி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் உண்டாக்கிய சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களுக்கு சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் பட்டியலை தயாரித்து அவர்களையும் சோதனை செய்ய சுகாதாரத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் வசித்து வந்த குடும்ப உறுப்பினர்களில் 3 பேர், அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 2 பேர் உட்பட 7 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மும்பையில் இருந்து வந்த 47 வயது பெண், அவரது 20 வயது மகள், சென்னையில் இருந்து வந்த 26 வயது இளைஞர், சவூதி அரேபியாவில் இருந்து வந்த 36 வயது நபர், சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த 29 வயது இளைஞர் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. இதில் 102 பேர் வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இரண்டு பேர் இறந்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்குக் கரோனா தொற்று உறுதி! - கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
கன்னியாகுமரி: காவல் ஆய்வாளர் உட்பட எட்டு பேருக்கு இன்று (ஜூன் 16) ஒரே நாளில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்குக் கரோனா தொற்று உறுதி! அரசு மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:56-tn-knk-04-corona-infection-increased-visual-7203868-16062020155414-1606f-1592303054-679.jpg?imwidth=3840)