ETV Bharat / state

கரோனா: குணமடைந்தவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!

கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

குமரியில் கரோனா நோயாளி ஒருவர் டிஸ்சார்ஜ்

author img

By

Published : Apr 23, 2020, 1:26 PM IST

குமரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் 4 பேர் மட்டும் கடந்த மாதம் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 பேர் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரில் ஒருவர் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியையும், மற்றொருவர் நாகர்கோவில் டென்னிசன் தெருவையும் சேர்ந்தவர்.

மேலும், இவர்களைத் தவிர 31ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய மணிக்கெட்டிபொட்டல் ஆனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டார்.

இவர்கள் ஐந்து பேர்தான் முதன் முதலில் குமரியில், கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

குமரி அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர் டிஸ்சார்ஜ்

பின்னர் அவர்களின் உறவினர்களிடம் நடந்த பரிசோதனையில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த இளைஞரின் 88 வயது பாட்டி, தாயார் மற்றும் மனைவி இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவரின் பெற்றோர், தம்பி மற்றும் இவர்களது வீட்டு அருகில் கடை வைத்துள்ள முதியவர், உறவினர் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி என மொத்தம் 16 பேர் குமரியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த இளைஞர் கரோனா தொற்று குணமடைந்து சரியானார். ஆனால் அவரது உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தான் வீடு திரும்ப விரும்பவில்லை என அவர் கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா பெருதொற்று சீரடைந்தது. அவருக்கு இரண்டு கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான தேங்காய்பட்டணத்திற்கு புறப்பட்டு செல்லும்போது மருத்துவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சர்வதேச புத்தக நாள்: வாசிப்பின் அவசியமும்... தேவையும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.