கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தனி சிறப்பு வார்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 15பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை விமான நிலைய ஊழியரின் வீட்டில் நடைபெற்ற குடும்ப விழாவில் கலந்து கொண்ட 45 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அம்மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் பார்க்க: 'அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசெல்பவர்களுக்கு மே 3 வரை அனுமதி நீட்டிப்பு'