ETV Bharat / state

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ வேட்புமனுத் தாக்கல்! - காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ

கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

vasanthakumar
author img

By

Published : Mar 25, 2019, 11:30 PM IST

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு வடநேரேவிடம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் அவருடன் திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குமரியில் சரக்குப் பெட்டக முனையம் கொண்டு வந்து மாவட்டத்தை அழிக்கக்கூடாது. இதற்கு பதிலாக ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் கொண்டு வரப்படும்" என்றார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் கோட்டார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆசி பெற்றார்.

Body:குமரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் மு வடநேரேவை சந்தித்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அவருடன் திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதைத்தொடர்ந்து வசந்த குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆயரை சந்தித்து ஆதரவும் ஆசிர்வாதமும் பெற்றேன் குமரி மாவட்டம் பெருமை வாய்ந்த மாவட்டமாகும். சரக்குப் பெட்டக முனையம் கொண்டுவந்து மாவட்டத்தை அளிக்கக்கூடாது. ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் தேவை, அதுதான் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
பொன்ராதாகிருஷ்ணன் ரூ 40,000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்ததாக கூறுகிறார். வளர்ச்சி என்பதை பேப்பரில் எழுதி கொடுத்தால் அது திட்டம் ஆகாது.
அந்த பணத்தை கடலில் கொண்டுபோய் கொட்டினார்களா?. அந்தப் பணத்துக்கு கணக்கு கொடுக்கட்டும். அவர் ஏற்கனவே பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர். கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக பள்ளி குழந்தைகளை ஏமாற்றி பதவிக்கு வந்தார். அவர் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார். ஆனால் செய்யவில்லை.
எம்எல்ஏவாக இருக்கும் நான் குமரி மாவட்டத்தில் 1,500 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன். நாங்குநேரி மக்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக பொன்ராதாகிருஷ்ணன் கூறுவது சரியல்ல. கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல சொந்த பணத்தில் ஜேசிபி வாங்கிக் கொடுத்து உள்ளேன். கொசு அடிக்கும் மிசின் கொடுத்துள்ளேன்.
நான் எம்பி ஆனதும் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை தடுத்து நிறுத்துவது தான் என் முதல் பணி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.