கன்னியாகுமரி: கன்னியாகுமரியைச் சேர்ந்த சுல்தான் என்பவரது மனைவி ரொஹியாம்மாள் (76) இன்று (ஜூன் 24) உயிரிழந்தார். இவரது ஜமாத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, இஸ்லாமியர்கள் இரு குழுவினராகப் பிரிந்து செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இவரது உடலை அடக்கம் செய்ய ஒரு குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் மோதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு உடனடியாக கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
பின்னர் இரு குழுவினரையும் அழைத்து காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் இரு குழுவினரும் உடலைப் பிரச்சினையின்றி அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர். மோதல் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரம்: மூவர் கைது!