நாடு முழுவதும் கரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து விதமான தொழிலாளர்களும் வேலையின்றி வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். பொது மக்கள் உணவுக்குக்கூட கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை 59 வயதாக அதிகரித்துள்ளது, இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: