ETV Bharat / state

கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்! - Assault claiming kidnapping sand

கன்னியாகுமரி: கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கடத்தல் மணல் எடுப்பதாக கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்
கடத்தல் மணல் எடுப்பதாக கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்
author img

By

Published : Dec 19, 2019, 2:38 AM IST

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் உரிய முறையில் பாஸ் பெற்றுக் கொண்டு எம்சாண்ட், ஆற்று மணல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவருகிறார்.

இவரும் இவரது உறவினரான மணிகண்டன் என்பவரும் கடந்த 14ஆம் தேதி ராஜாக்கமங்கலம் பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணல் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திலீபன் கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கியுள்ளார்.

கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

Intro:கன்னியாகுமரி: லாரியில் மணல் கடத்தியதாக கூறி வாலிபருக்கு சரமாரி அடி. போலீஸ் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார்.Body:குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவர் டாரஸ் லாரி வைத்து எம்சாண்ட், மணல் போன்றவை எடுத்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரும் இவரது உறவினரான மணிகண்டன் என்பவரும் கடந்த 14ஆம் தேதி ராஜாக்கமங்கலம் பகுதியில் டாரஸ் லாரியுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திலீபன் வண்டியை சோதனையிடுள்ளார்.
லாரியில் உரிய முறையில் பாஸ் பெற்று எடுக்கப்பட்ட மணல் இருந்தது. இதை சோதனை செய்த பின்னர். கடத்தல் மண் கொண்டு செல்வதாக கூறி லாரியை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இதை தட்டி கேட்ட மணிகண்டனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், உரிய ஆவணங்களுடன் மணல் கொண்டு சென்ற பிறகும் கடத்தல் மணல் கொண்டு சென்றதாக கூறி லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிகண்டனை சரமாரியாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மணிகண்டனை சரமாரியாக தாக்கிய மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.