தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாகவும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது, வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம் 1949 இல் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களைக் கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளின் அடிப்படை தன்மையை மாற்றிவிடும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: இதுதான் கடைசி; எச்சரித்த நெல்லை ஆட்சியர்!