ETV Bharat / state

மணல் தட்டுபாட்டை போக்க கட்டுமான பொறியாளர்கள்  கோரிக்கை - M sand for construction

கன்னியாகுமரி: மணல் தட்டுபாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Civil engineers
Civil engineers
author img

By

Published : Dec 4, 2019, 8:35 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் தலைமை பண்புகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டடத் தொழில் சம்பந்தமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான கண்கட்சியும் நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் முரளிகுமார், கட்டுமான தொழிலில் மணல் தட்டுப்பாடு நீண்ட நாட்களாக நிலவுகிறது. மணலுக்கு மாற்று மூலப்பொருளான எம்சாண்ட் பயன்படுத்தபட்டாலும் தாராளமாக கிடைப்பதில்லை. தட்டுபாடின்றி எம்சாண்ட் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான பொறியாளர்களுக்கான கருத்தரங்கம்

தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய கட்டட விதிகளில் சில எங்களுக்கு பயனுள்ளதாகவும் பல பாதகமாகவும் உள்ளன. பாதகமானவற்றை அரசிடம் எடுத்துரைத்துள்ளோம் அதற்கு சாதகமான முடிவு கிடைக்க தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் 40 சதவீதம் வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. அவற்றை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் கட்டுமான தொழிலில் உள்ள பொறியாளர்கள் அரசு அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும். கட்டுமான தொழிலில் உள்ள தேக்க நிலையை மாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Intro:தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சார்பில் கருத்தரங்கம் தொடங்கியது.மணல் தட்டுபாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை.Body:tn_knk_04_engineers_conference_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சார்பில் கருத்தரங்கம் தொடங்கியது.மணல் தட்டுபாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச்சேர்ந்த சுமார் 90 சங்கங்கள் இணைந்து சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தலைமை பண்புகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கம் கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது. கருத்தரங்கிற்கு மாநில தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கட்டிடத்தொழில் சம்பந்தமன முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான கண்கட்சியும் நடைபெற்றது. துவக்கநாள் நிகழ்வுக்கு பின் மாநில தலைவர் ராகவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-

கட்டுமான தொழிலில் மணல் தட்டுப்பாடு நீண்ட நாட்களாக நிலவுகிறது.மணலுக்கு மாற்று மூலபொருளான எம்சாண்ட் பயன்படுத்தபட்டாலும் தாராளமாக கிடைப்பதில்லை.தட்டுபாடு இன்றி எம்சாண்ட் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய கட்டிட விதிகள் சில எங்களுக்கு பயனுள்ளதாகவும் பல பாதகமாகவும் உள்ளது. பாதகமானவற்றை அரசிடம் எடுத்துரைத்துள்ளோம் அதற்கு சாதகமான முடிவு கிடைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 40 சதவீதம் வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. அவற்றை அரசு வரைமுறைபடுத்த வேண்டும். அதேபோல் கட்டுமான தொழிலில் உள்ள என்ஜினியர்கள் அரசு அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும்.கட்டுமான தொழிலில் உள்ள தேக்க நிலையை மாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் கூறினார்.கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.