சமூக விரோதிகளிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். அம்மனுவில், ”குமரி மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெந்தகோஸ்து சபைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 500க்கும் அதிகமான சபை ஊழியர்களும், சபைகளும் அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி நாங்கள் வீடுகளில் ஜெபிக்கவும் சபைகளின் ஆராதிக்கவும் செய்கிறோம்.
ஆனால் சமீபகாலமாக எங்களது மத நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக சில விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் காவல் துறை, வட்டாட்சியர், வருவாய் துறை ஆகியோர் துணையோடு கிறிஸ்தவர்களின் வீடுகள் மீதும், சபைகள் மீதும் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், சபைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
ஜெபம் நடத்த மாட்டோம் என்று மிரட்டி எழுதி வாங்குவதும், சபைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது எங்கள் மத சுதந்திரத்தையும் மனித உரிமையை மீறுகின்ற செயலாக உள்ளது. எனவே சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடமிருந்து சபைகளை பாதுகாக்கவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நாங்கள் ஜெபிக்கவும் ஆராதிக்கவும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”என தெரித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 1,623 பேர்!