கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தனர்.