இந்திய அளவில் புகழ் பெற்ற மலர் சந்தை அமைந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிராமத்தை சுற்றி உள்ள 13 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு திருமண மண்டபம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழ்நாடு அரசு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் திருமண மண்டபத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று (பிப்.13) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், குமரி ஆவின் பெருந்தலைவருமான அசோகன், மேற்கு மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி ரப்பர் போர்டு தலைவருமான ஜாண்தங்கம், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான கே.டி.பச்சைமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி