ETV Bharat / state

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாடு குறித்த பேச்சுவார்த்தை: டென்சனான அறநிலையத்துறை அமைச்சர் - ஹைந்தவ சேவா சங்கம்

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு டென்ஷன் ஆனார்.

Charitable Endowments Department Minister Tension at a press meet
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாடு குறித்த பேச்சுவார்த்தை: டென்சனான அறநிலையத்துறை அமைச்சர்
author img

By

Published : Feb 21, 2023, 10:51 PM IST

டென்சனான அறநிலையத்துறை அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் இந்து சமய மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்து சமய மாநாடு அறநிலையத்துறை சார்பில் நடத்தபடுவதாகவும், ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டிக்கும் விதமாகவும், அனுமதி வழங்க கேட்டும் பாஜக உட்பட இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த அமைச்சர் சேகர்பாபுவை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்," மார்ச் 5-ம் தேதி மண்டைக்காடு உற்சவத்தை பற்றியும், அந்த இடத்தில் 10 நாட்கள் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்துவதா, ஹைந்தவ சங்கம் சார்பில் நடத்துவதா என்ற சர்ச்சையில் பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஹைந்தவ சங்கத்தினரும் சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்கள் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்போகிறார்கள் என சொன்னார்கள். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி இணை ஆணையர் ஞானசேகரும் பேசினார். இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டது. இருதரப்பும் என்ன செய்யபோகிறது என்பதை பேசினார்கள். இரண்டுபேருக்கும் சாதகபாதகம் இல்லாமல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அனைவரும் கலந்துகொள்ளுகின்ற நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைத்திருக்கிறோம்.

அதன் பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் என்னை சந்தித்தவர்கள் அவர்களது முக்கியஸ்தர்களிடம் பேசிவிட்டு மீண்டும் எங்களிடம் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்தை பரிசீலனை செய்வதாக அவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

நல்ல சுமுகமான சூழ்நிலை சென்றுகொண்டிருப்பதால். இரண்டு தரப்பிலும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை வெளியில் நாம் விவாதித்தால் அது நல்ல சூழலாக இருக்காது என்பதால் நான் கூறிய இந்த கருத்துக்களோடு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனிடையே அமைச்சரிடம் செய்தியாளர் கேள்வி கேட்ட போது என்னை" பிரசர் பண்ணாதீங்க., பிரசர் பண்ணாதீங்க...., என்று கோபத்துடன் கூறியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள்" - அண்ணாமலை முன்னிலையில் சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.