கன்னியாகுமரி: திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மொழிப்போர் தியாகிகளின் முக்கியமானவர் மார்ஷல் நேசமணி. இவரது 128 ஆவது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகே உள்ள மார்ஷல் நேசமணியின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மொழி போராட்ட தியாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற போராட்டங்களில் மொழிப்போர் தியாகிகளை வழிநடத்தியதோடு சரியான திட்டங்கள் மூலம் குமரி விடுதலை போராட்டத்தில் முக்கியத் தலைவராக விளங்கியவர் மார்ஷல் நேசமணி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை