கன்னியாகுமரி: திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், தக்கலை அடுத்த முட்டைக்காடு பகுதியில் நீண்ட காலமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அக்கடையின் அருகே அண்மையில் அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் பார் ஒன்றை, குமாரபுரம் பேரூராட்சி பேரூர் கழக திமுக செயலாளர் ஷாஜி நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், டாஸ்மாக் பாருக்கு அருகில் உள்ள பெட்டிக்கடை போக்குவரத்துக்கு இடையூறுதலாக இருப்பதாக கூறி, பெட்டி கடையை அகற்றக்கோரி ஷாஜி மிரட்டி வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சில தினங்களுக்கு முன்பு, ஷாஜி அடியாட்களுடன் சென்று பெட்டி கடையை அடித்து உடைத்து கடைகாரரையும் தாக்கி உள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக பாதிக்கபட்ட பெட்டிகடைகாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள்; வைரலாகும் வீடியோ