ETV Bharat / state

முதியவர் மீது மினிப்பேருந்து மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

நாகர்கோவில் அருகே முதியவர் மீது மினிப்பேருந்து மோதிய விபத்தில், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2022, 7:33 AM IST

Updated : Aug 21, 2022, 7:41 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள என்ஜிஓ காலனி பகுதியில் மன வளர்ச்சி குன்றிய நிலையில், முதியவர் ஒருவர் சாலையோரமாக வசித்து வந்தார். சாலையில் கிடக்கும் பொருள்களை எடுத்து சிறு குழந்தை போல, காலால் எட்டி உதைத்தும், கைகளில் தூக்கி எறிந்தும் விளையாடி வருவது இவரது வழக்கம்.

இதேபோல, நேற்று (ஆக. 20) அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகாமையில் ஏதோ ஒரு பொருளை காலால் எட்டி உதைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் ஒரு புறம் இருந்து மறுபுறம் வந்துவிட்டு அவர் திரும்பும்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த மினிப்பேருந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

மன நலம் குன்றிய முதியவர் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி....

இந்த விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதியவர் படுகாயங்களுடன் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை தப்பியோட்டம்...

Last Updated : Aug 21, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.