கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு, ஆயவிளை பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவரது மகள் வேதிகா மோகன் (20). தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். தேர்வு நேரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழ் கிடைக்காததால் தேர்வு எழுதமுடியாமல் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பின்னர், மாணவிக்கு சாதி சான்றிதழ் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனரான இவரது தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பல அரசு அலுவலகங்கள் தாயுடன் ஏறி இறங்கியும் சான்றிதழ் கிடைக்காததால் மன அழுத்தம் காரணமாக பல முறை தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில் அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: