ETV Bharat / state

டிராவல்ஸ் உரிமையாளரிடம் பண மோசடி: இளைஞர் கைது - Kanniyakumar news

கன்னியாகுமரி: அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறி, நாகர்கோவில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டச்
ட்ஃபச்
author img

By

Published : Apr 11, 2021, 11:35 AM IST

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் எம்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (27). இவர் டிராவல்ஸ் நடத்திவருகிறார். விமான டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்து கொடுப்பார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இவரிடம் திருப்பூர் பகுதியை சேர்ந்த பர்கத் அலி (29) என்பவர் ஃபோனில் தொடர்புகொண்டார். டாக்டர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் டிக்கெட் புக் செய்யும்படியும், நாகர்கோவிலில் அக்கா வீட்டுக்கு வரும்போது பணத்தை தந்து, டிக்கட் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

பின்னர் தொடர்ந்து அடிக்கடி போனில் பேசிய பர்கத் அலி, தனக்கு ரூ.40 ஆயிரம் அவசரமாக தேவைப்படுவதாகவும், தனது அக்கவுண்ட் நம்பருக்கு அனுப்பி வைத்தால், டிக்கெட் கட்டணத்துடன் அதையும் சேர்த்து தந்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பி பர்கத் அலி அனுப்பிய வங்கி கணக்கிற்கு, ரகுமான் ரூ.40 ஆயிரம் ஃபோன் பே மூலம் அனுப்பினார். ஆனால் அதன் பின்னர், பர்கத் அலி தொடர்பு கொள்ளவில்லை. அவரது போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரகுமான், இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில், காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வந்த நபரின் மீது சந்தேகம் அடைந்த சிலர் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி போலீசார் சென்று விசாரித்தபோதுதான், அந்த நபர் பர்கத் அலி என்பது தெரியவந்தது. உடனடியாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி ஆய்வாளர் சத்யசோபன் தலைமையில் போலீசார் சென்று, பர்கத் அலியை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து ஆதார் கார்டு, பான்கார்டு கைப்பற்றப்பட்டன. அவை போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.