கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் விற்பiனை மற்றும் இருசக்கர வாகனங்கள் கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. நகரப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தை வைத்து விட்டு கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தால் வாகனம் மாயமாகி விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக ஆரல்வாய்மொழி பகுதியில் வேறு மாவட்டங்களில் இருந்து இரு சக்கர வாகனம் திருடும் கும்பல் புகுந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடி சென்று விடுகின்றனர். இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் கொடுத்தும் போலீஸ் தரப்பில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆரல்வாய்மொழி பகுதியில் ஊர்மக்கள் விடிய விடிய காத்திருந்து வீட்டில் வந்து பைக்கை திருடும் குல்பலை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் திருடடில் ஈடுபட்டவர்களை பிடித்துக் கொடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். போலீசார் நடவடிக்கைக்கு வழக்கறிஞர் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'வலிமை' பட பாணியில் செல்போன் பறிப்பில் ஈடுபடும் கும்பல் - 16 வயது சிறுமி உட்பட 5 பேர் கைது!