குமரி மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக கால் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதனால், வாகனங்களின் தவணைத் தொகையை மூன்று மாத காலத்திற்கு வசூலிக்க கூடாது. செக் பவுன்ஸ் அபராதங்களையும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே காலாவதியான வாகனங்களின் தகுதிச்சான்று, பர்மிட் பேட்ஜ், சாலை வரி ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும். மேலும், கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவை இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் பேட்ஜ் லைசென்ஸ் வைத்துள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் நிவாரண தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளும் குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு மூடவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர்கள் மனு