மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கட்சிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த இளங்கடையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் கூட்டமைப்பு, உலமா சபை ஆகிய இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான சுரேஷ்ராஜன், ஆஸ்டின், கிறிஸ்தவ பேராயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ், ஞானதாசன் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி - முடங்கிய ஹைதராபாத்!