கன்னியாகுமரி கடலின் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் 133அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளன. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள், நேரில் பார்த்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகு சேவை வழங்கப்பட்டுவருகிறது.
இதற்கென எம்.எல். குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகிய படகுகள் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன. இதற்கென பூம்புகார் வளாகத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் படகு நிறுத்தும் தளம் உள்ளது. இங்கு கூடுதலாக ஒரு படகுதளம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், ரூ.2 கோடி செலவில் 90 மீட்டர் நீளத்தில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். படகு தளம் அமைப்பதற்கான சிமெண்ட் பிளாக்குகள் கன்னியாகுமரியை அடுத்துள்ள மாதவபுரத்தில் தற்போது தயாராகிவருகின்றன.
இதையும் படிங்க: தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு!