விவேகானந்தரின் 158ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்பட்டுவரும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம், சுப்ரீம் ரோட்டரி கிளப் ஆஃப் நாகர்கோவில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடத்தின.
இந்த முகாமில் 158 பேர் ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்ற தலைவர் ஜேப்பியார் தலைமை வகித்தார். ரத்த தான முகாமை தலைமை மருத்துவர் ஜேனட் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கம்பம் விவேகானந்தர் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்