ETV Bharat / state

தமிழகம் முழுவதும் தீவிரமாகும் அண்ணாமலையின் கட்சிக்கொடி ஏற்றும் சவால்! - BJP members hoist BJP flags

BJP members hoist BJP flags in TN: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து 100 நாட்களில் 10 ஆயிரம் பாஜக கொடிகளை பாஜக கட்சி ஏற்றி சாதனை படைக்கும் என அறிவித்ததையடுத்து, கன்னியாகுமரியில் பாஜக உறுப்பினர்கள் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கொடிகளை ஏற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக கொடி ஏற்றும் பாஜக உறுப்பினர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 7:57 PM IST

தமிழகத்தில் பாஜக கொடி ஏற்றும் பாஜக உறுப்பினர்கள்

கன்னியாகுமரி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை (நவ.3) இரவு கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. அதில் சனிக்கிழமை (நவ.4) பாரதிய ஜனதா கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு பனையூரில் உள்ள ஒரு பகுதி இஸ்லாமியர்களும், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொடிக் கம்பம் அமைத்து கட்சிக் கொடு ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் நவ.4 ஆம் தேதி இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெறாமல் கொடிக் கம்பம் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அப்போது, கொடி கம்பத்தை அகற்ற JCB இயந்திரம் கொண்டு வரப்பட்ட போது, பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் பாஜக-வினர், JCB இயந்திரத்தை எதிர்த்து கற்களை வீசி தாக்கினர்.

இதனையடுத்து வாகனத்தைச் சேதப்படுத்திய பாஜகவைச் சேர்ந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்து கொடி கம்பத்தையும் அகற்றினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொடிக் கம்பத்தை அகற்றியதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 நாட்களில் தினம் 100 கொடிக்கம்பங்கள் என்ற வகையில் 10 ஆயிரம் கொடி கம்பங்கள் தமிழகம் முழுவதும் நடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக் கொடி கம்பம் நடப்பட்டு, கொடி ஏற்றப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (நவ.5) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊட்டு வாழ் மடம் பகுதியில் உள்ள மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமனுக்கு சொந்தமான இடத்திலும், மேல சங்கரன்குழி ஊராட்சித் தலைவர் முத்து சரவணன் இல்லம் முன்பும் பிஜேபி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதுவரை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் பாஜக கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.