இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவிலில் பிரமாண்டமான பேரணி நடந்தது.
சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, பார்வதிபுரத்திலிருந்து தொடங்கி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே சென்று முடிவடைந்தது.
அங்கு நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது “இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் இது ஒரு சுதந்திர போராட்டம் என்று கூறுகிறார்கள். அதேபோல், பாரதிய ஜனதா கட்சியும் இது ஒரு உரிமை போராட்டம் என்று கூறுகிறது.
இந்திய மண்ணில் ஒருவர்கூட மதமாற்றம் செய்யப் படக்கூடாது என்பதுதான் அந்த உரிமைப்போராட்டம். அதேபோன்று மதமாற்றம் செய்யும் சக்திகள் ஒடுக்கப்பட்டாக வேண்டும்.
ஒரு கிறிஸ்தவ காவலர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதை பார்க்க வேண்டும். இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர், ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவர்கள் சட்டசபையில் உயிரோடுதான் இருந்தார்களா ? இல்லையா? என்பது கூட தெரியவில்லை” என்று கூறினார்.
இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரான முரளிதர் ராவ் பேசும்போது, “திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் ஒரு போராட்டம், மதியம் ஒரு போராட்டம், மாலையில் ஒரு போராட்டம் நடத்தினாலும் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கும் எதிரானது' - கே.எஸ் அழகிரி