ETV Bharat / state

கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசியவர்களை கைதுசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - கன்னியாகுமரியில் பஜாவினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: தமிழ்க்கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவாகப் பேசிய கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் தளத்தைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக ஆர்ப்பாட்டம்
Demonstration demanding the arrest of those who spoke disparagingly of the Kandasashti armor!
author img

By

Published : Jul 16, 2020, 7:25 PM IST

தமிழ்க் கடவுள் முருகனையும் அவரது புகழைப் பாடும் கந்த சஷ்டி கவசம் என்ற பக்திப் பாடலையும்; கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ-ட்யூப் தளத்தில் செயல்பட்டு வரும் அமைப்பானது மிகவும் இழிவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியது.

இந்நிலையில் குமரி மாவட்ட பாஜக சார்பில், கறுப்பர் கூட்டம் யூ- ட்யூப் குழுவினரை தடை செய்யக் கோரியும், அதில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில், குமரி மாவட்டம், மருங்கூர் முருகன் கோயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் கறுப்பர் கூட்டம் அமைப்பைத் தடை செய்யக்கோரி பாஜக-வினர் முழக்கம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடி பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.