கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவர்களின் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது கேக் வெட்டி கொண்டாடிய அவர்கள் திடீரென நண்பனை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
பின்னர் அவர் உடலில் தயிர், முட்டை, தக்காளி, இட்லி மாவு, மாட்டு சானம் உள்ளிட்டவற்றை ஊற்றி மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர்.
தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் இதுபோன்று இளைஞர்கள் கூடி பிறந்தநாள் கொண்டாடியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை - போதை இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!