ETV Bharat / state

பகவதி அம்மன் கோயில் திருவிழா: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - கன்னியாகுமரி

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

File pic
author img

By

Published : May 16, 2019, 9:35 AM IST

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவானது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

பகவதி அம்மன் கோயில் திருவிழா

இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளிலிருந்தும் வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சியும் கோயில் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருவிழாவை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

Intro:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகல கொண்டாட்டம் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் கேரள பாரம்பரிய வாகன பவனியும் சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.

Body:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகல கொண்டாட்டம் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் கேரள பாரம்பரிய வாகன பவனியும் சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் நடந்த வண்ணம் உள்ளன ஏழாம் திருவிழாவான இன்று அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நாதஸ்வர இசை மங்கல இசையும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது மாலை 5 மணிக்கு சமயபுரம் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளிலிருந்தும் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி கோவில்கள் அரங்கத்தில் நடைபெற்றது தொடர்ந்து பகவதி அம்மன் இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் சுருள் வைத்து அம்மனை வழிபட்டனர் வாகனமானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு கோவிலுக்கு சென்றது வாகனத்தின் முன்பு கேரளா பாரம்பரியத்தின்படி கலை நிகழ்ச்சிகளும் சிவன் பார்வதி வேடமிட்டு நடனங்களும் நடைபெற்றன தற்போது கன்னியாகுமரியில் கோடை விடுமுறை களைகட்டியுள்ளது பக்தர்கள் மட்டுமில்லாமல் சுற்றுலாப் பயணிகளும் நள்ளிரவிலும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி அம்மனை வழிபட்டு சுற்றுலாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.