ETV Bharat / state

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக புதிய நடவடிக்கை! - balajenathibathi kanyakumari

கன்னியாகுமரி : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளதாக அதன் நிர்வாகி பூஜிதகுரு பாலஜனாதிபதி தெரிவித்தார்.

balajenathibathi-kanyakumari
author img

By

Published : Oct 1, 2019, 9:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் பூஜிதகுரு பாலஜனாதிபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியைச் சுற்றியுள்ள ரதவீதி தற்போது கரடுமுரடாக காணப்படுகிறது. இது விரைவில் சரி செய்யப்பட்டு மணல் நிரப்பி சமன் செய்யப்பட்டு பதி வளாகம் எப்போதும் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பூஜிதகுரு பாலஜனாதிபதி செய்தியாளர் சந்திப்பு

மேலும், தலைமைப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தற்போது கழிவறை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் அவர்களின் வசதிக்காக பதியின் வளாகத்தில் கூடுதலாக இன்னும் 65 கழிப்பறைகள் இந்த தை மாதத் திருவிழாவிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இங்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றும், இதுபோல் பதியின் பேரால் கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தவறானவர்களிடம் தர்மத்தை (காணிக்கை) கொடுத்து ஏமாந்து விடாமல், பதியின் திருப்பணிக்கென கொடுப்பவர்கள் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகளிடம் மட்டும் கொடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:

தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்: ஆசிரியை கொடூரத் தாக்குதல்!

Intro:சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளதாக அதன் நிர்வாகி பூஜிதகுரு பாலஜனாதிபதி தெரிவித்தார்.Body:
tn_knk_01_balajenathibathi_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளதாக அதன் நிர்வாகி பூஜிதகுரு பாலஜனாதிபதி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நிறுவனத்தலைவரும் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் நிர்வாகியுமான பூஜிதகுரு பாலஜனாதிபதி அறக்கட்டளையின் நிர்வாகிகளுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாமிமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியை சுற்றியுள்ள ரதவீதி தற்போது கரடுமுரடாக காணப்படுகிறது. இது விரைவில் சரி செய்யப்பட்டு மணல் நிரப்பி சமன் செய்யப்பட்டு பதி வளாகம் எப்போதும் பகல் போன்று தோன்றும் வகையில் எப்போதும் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்படும்.

தலைமைப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தற்போது கழிவறை வசதிகள் போதிய அளவில் இல்லை இதனால் அவர்களின் வசதிக்காக பதியின் வளாகத்தில் கூடுதலாக இன்னும் 65 கழிப்பறைகள் இந்த தை மாத திருவிழாவிற்குள் கட்டி முடிக்கப்படும்.

மேலும் இங்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

இதுபோல் பதியின் பேரால் கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தவறானவர்களிடம் தர்மத்தை(காணிக்கை) கொடுத்து ஏமாந்து விடாமல்..... பதியின் திருப்பணிக்கென கொடுப்பவர்கள் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகளிடம் மட்டும் கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.