ETV Bharat / state

சுகாதாரமற்று காட்சியளிக்கும் பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாய்! - சுகாதாரமற்ற நிலையில் உள்ள ஏவிஎம் கால்வாய்

கன்னியாகுமரி: சுகாதாரமற்ற நிலையிலுள்ள பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி தேங்காய் பட்டணத்தில் அனைத்து கட்சியினரும் சமுக அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Avm canal
author img

By

Published : Oct 11, 2019, 9:28 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் புதூர் வரை உள்ள மிக முக்கியமான கால்வாய், விக்டோரியா மகாராணி பெயரில் உள்ள ஏவிஎம் கால்வாயாகும். பண்டையக் காலத்தில் படகுப் போக்குவரத்து நடந்த ஏவிஎம் கால்வாயானது, ஆக்கிரமிப்புக் காரணமாக தற்போது சிறிய நீரோடையாக மாறியுள்ளது.

தேங்காய் பட்டணம் பகுதியில் உள்ள இந்தக் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதாலும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் இந்தப் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்தக் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமார் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி - தொடங்கியது மத்திய அரசு!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரமற்று உள்ள பாரம்பரியமிக்க ஏவிஎம் கால்வாயை சீரமைக்க கேட்டு தேங்காய்பட்டணத்தில் அனைத்து கட்சியினர் சமுக அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் நீரேடி முதல் புதூர் வரை உள்ள மிக முக்கியமான கால்வாய் விக்டோரியா மாகாராணி பெயரில் உள்ள ஏவிஎம் கால்வாயாகும். பண்டைய காலத்தில் படகு போக்குவரத்து நடந்த இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது சிறிய நிரோடையாக மாறி உள்ளது.
தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள இந்த கால்வாயில் குப்பை கூளங்களை கொட்டுவதாலும், இறைச்சி கழிவுகளை கொட்டுவதாலும் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த கால்வாயை தூர்வாரி சிரமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.